புதுடெல்லி: இந்திய தபால் சேவையை லாபகரமாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்கள் குறித்து மத்திய தபால் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து, அவர்களை தக்கவைத்து, செயல்பாட்டு திறனை அதிகரிக்க தபால் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சிந்தியா தெரிவித்தார்.
அவர் கூறுகையில், அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில், தபால் துறையின் சந்தைப் பங்கை அதிகரிக்கவும், வருவாயை அதிகரிக்கவும், தொழில் போட்டியை சமாளிக்கவும், இந்திய தபால் துறையை உலக அளவில் போட்டியாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், புதிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.