இந்த வாரத்துக்குள் ஏற்ற இறக்கங்களை சந்தித்த தங்கம் விலை, வார இறுதியில் மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை நிலையாக உயர்ந்து வந்தது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஆனால் அதன் பின் சில நாட்களுக்கு தங்கத்தின் விலை சரிந்து வந்தது. ஜூலை மாதம் தொடங்கியவுடன், விலை மீண்டும் பலமுறை ஏற்ற இறக்கத்தைக் கண்டது.

நேற்று (ஜூலை 4) விலை ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.9,050, ஒரு சவரனுக்கு ரூ.72,400 ஆக இருந்தது. ஆனால் இன்று (ஜூலை 5) விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து ரூ.9,060 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.72,480 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கத்தில் முதலீடு செய்பவர்களிடம் சற்று நம்பிக்கையைக் கூட்டும் வகையில் இருக்கிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் 18 காரட் தங்கத்தின் விலை ரூ.7,475 ஆக உள்ளது, இது நேற்று வீதத்தில் இருந்து ரூ.5 அதிகரித்தது. ஒரு சவரன் விலை ரூ.59,800 ஆகவும் உள்ளது, இது ரூ.40 அதிகரிப்பாகும். இந்த மாற்றம் நகை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாறாக, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120 என்றும், ஒரு கிலோ ரூ.1,20,000 என்றும் கடந்த சில நாட்களாகவே நிலைத்துவந்த விலை அதேபடி தொடர்ந்து வருகிறது. தங்கம் விலை மீண்டும் உயர்வடைந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் சந்தை நிலவரம் எந்தபடி மாறும் என கவனிக்க வேண்டியுள்ளது.