சென்னை: தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கு விற்கப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலைமையைப் பொறுத்து இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. இந்த நிலையில், நேற்று தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.8,755 ஆகவும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040 ஆகவும் இருந்தது.

அதேபோல், 24 காரட் தூய தங்கம் ரூ.76,400-க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில், வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு ரூ.109 ஆக மாறாமல் இருந்தது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,09,000 ஆக இருந்தது.