புதுடெல்லி: எஃகு துறைக்கான உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய அரசு இன்று தொடங்க உள்ளது என எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எஃகுத் துறைக்கான உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டத்தின் (பிஎல்ஐ) இரண்டாம் கட்டத்தை மத்திய அரசு இன்று தொடங்க உள்ளது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உருக்கு துறையில் இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு ஏற்கனவே பிஎல்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ.27,106 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு, 79 லட்சம் டன் இரும்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 2024 நிலவரப்படி, நிறுவனங்கள் ரூ.18,300 கோடி முதலீடு செய்துள்ளன. இதனால், 8,660க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தத் துறைக்கான பிஎல்ஐயின் மற்றொரு சுற்று, ‘பிஎல்ஐ, 1.1’ நடந்து வருகிறது. இந்த திட்டத்தை மத்திய உருக்கு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி இன்று ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.