கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தங்கம் முதலீட்டிற்கான பாதுகாப்பான தேர்வாக கருதப்பட்டாலும், சமீபத்தில் வெள்ளி முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்குக் காரணம், வெள்ளியின் விலையில் ஏற்பட்ட பெரிய ஏற்றம்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் வெள்ளி விலை சுமார் 30% அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ வெள்ளியின் விலை சுமார் ரூ.1.30 லட்சமாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் அது ரூ.2 லட்சத்தை எட்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலகப் பொருளாதார சிக்கல்கள், டாலரின் பலவீனம், அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல்கள் ஆகியவை முதலீட்டாளர்களை மாற்று வாய்ப்புகளை நோக்கித் தள்ளுகின்றன. அந்த சூழ்நிலையில் வெள்ளி ஒரு நல்ல தேர்வாக மாறியுள்ளது. இந்தியாவில் வெள்ளி நகைகள் மட்டுமின்றி, கோயில்கள், பூஜைகள், பரிசளிப்பு போன்றவற்றிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேவை மேலும் உயர்கிறது.
அடுத்த 12 முதல் 24 மாதங்களில் வெள்ளி விலை மேலும் 15-20% வரை உயரும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது நல்ல வருமானத்தை தரக்கூடும். நிதி நிபுணர் நிதின் கௌஷிக் கூறுவதாவது, ஆபத்துக்களை ஏற்கும் முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் பெரிய லாபம் காணலாம், ஆனால் விலைகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.