வர்த்தக வாரத்தின் மூன்றாவது நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக நிப்டி மற்றும் சென்செக்ஸ் தலா ஒரு சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன. உலகளாவிய சந்தை போக்குகளை ஒட்டி, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகளுடன், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக, நுகர்பொருட்கள் தவிர்த்து அனைத்து துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால், சந்தை நல்ல உயர்வு கண்டது.
![](https://vivegamnews.com/wp-content/uploads/2025/01/image-846.png)
நிப்டி குறியீட்டில், நுகர்பொருட்கள் தவிர, அனைத்து துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக, ரியல் எஸ்டேட் குறியீடு 2.91 சதவீதம் உயர்ந்தது; ஐ.டி., ஊடகத் துறை குறியீடு 2.50 சதவீதம் உயர்ந்தது; எனர்ஜி, உலோகம் மற்றும் மருந்து துறை குறியீடுகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்வு கண்டன.
மும்பை பங்குச் சந்தையில், 2,981 நிறுவன பங்குகள் உயர்ந்தன, 1,005 நிறுவன பங்குகள் குறைந்தன, 96 நிறுவன பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமாகின.
அன்னிய முதலீட்டாளர்கள் 2,586 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர். உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 0.93 சதவீதம் குறைந்து, 76.77 அமெரிக்க டாலருக்கு இறங்கியது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்து, 86.55 ரூபாயாக இருந்தது.
நிப்டி 50 பங்குகளில் அதிக ஏற்றம் கண்டவை ஸ்ரீராம் பைனான்ஸ், பெல், டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ., லைப் மற்றும் டிரென்ட் ஆகியவை. அதிக இறக்கம் கண்டவை, ஐ.டி.சி., ஹோட்டல்ஸ், மாருதி, ஏசியன் பெயின்ட், பார்தி ஏர்டெல் மற்றும் பிரிட்டானியா ஆகியவை.
இன்று, பங்குச் சந்தையில் சந்திரோதயம் ஏற்படும் போது, முன்னேற்றம் மற்றும் பின்னடைவை பொருத்தும் சந்தையின் அடுத்த செயல்பாடுகளை கவனமாக மதிப்பிடுவது முக்கியம்.