2025-ம் ஆண்டின் தொடக்கமானது பங்குச் சந்தைகளுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் வர்த்தக நாளான கடந்த புதன்கிழமை சென்செக்ஸ் 368 புள்ளிகளும், நிஃப்டி 98 புள்ளிகளும் உயர்ந்தன. இந்நிலையில், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி ரீஃபண்டுகள் கணிசமாக அதிகரித்தாலும், கடந்த ஆண்டு டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவீதம் அதிகரித்து ரூ. 1.77 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.
இதன் காரணமாக புத்தாண்டின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று பங்குச்சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்தது. சென்செக்ஸ் 1,436 புள்ளிகள் (1.83 சதவீதம்) உயர்ந்து 79,943 புள்ளிகளில் நிலைத்தது. ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரே நாளில் சென்செக்ஸ் இந்த அளவுக்கு உயர்வது இதுவே முதல்முறை.
வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் 1,525 புள்ளிகள் அல்லது 1.94 சதவீதம் உயர்ந்தது. நிஃப்டி 50 குறியீடு 445 புள்ளிகள் அல்லது 1.88 சதவீதம் உயர்ந்து 24,188 ஆக இருந்தது. பஜாஜ் ஃபைனான்ஸ் 6 சதவீதம், பஜாஜ் ஃபின்சர்வ் 8 சதவீதம் அதிகரித்தது. மாருதி, டைட்டன், மஹிந்திரா, இன்ஃபோசிஸ், எச்.சி.எல், ஜொமாடோ மற்றும் அல்ட்ராடெக் ஆகிய நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டியுள்ளன. இருப்பினும், சன் பார்மா மட்டுமே குறைந்த வர்த்தகத்தில் ஈடுபட்டது.