நாட்டுக்கோழி என்றால் கிராமப்புற வாழ்வின் ஒரு அடையாளம். ஒரு காலத்தில் வீடுதோறும் வளர்க்கப்பட்ட இந்த கோழிகள், பிராய்லர் கோழிகள் வந்த பிறகு மறைந்து போனது. ஆனால் சமீப காலமாக ஆரோக்கிய உணவின் மீதான விழிப்புணர்வு அதிகரித்ததால், மக்கள் மீண்டும் நாட்டுக்கோழி இறைச்சியை விரும்பி உண்ண தொடங்கியுள்ளனர். வேதியியல் சேர்வுகள் இல்லாமல் இயற்கை முறையில் வளர்க்கப்படும் இவை, சுவையிலும் சத்திலும் மற்ற எந்த கோழி இனத்தையும் மிஞ்சுகின்றன.

இந்த கோழி இனங்களில் “கழுத்தரிச்சான்” எனப்படும் வகை தனித்தன்மை வாய்ந்தது. இதன் கழுத்தில் இறகுகள் இல்லாமல் காணப்படுவதால் சிலர் முதலில் விரும்பாதபோதிலும், இதுவே அதன் சிறப்பு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ‘பிஎம்பி 12’ எனப்படும் மரபணுவை உடையதால், இந்த கோழிகள் சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் D-ஐ உடலில் உறிஞ்சிக் கொள்ளும் திறன் பெற்றுள்ளன. இதன் காரணமாக இவை ஆரோக்கியத்திற்கும், மருத்துவ குணங்களுக்கும் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
நாட்டுக்கோழி வளர்ப்பு தற்போது ஒரு நல்ல தொழில் வாய்ப்பாக மாறியுள்ளது. சிறிய அளவில் 20–30 கோழிகளை வளர்த்துத் தொடங்கும் பலர், தற்போது நூற்றுக்கணக்கில் வளர்த்து வருமானம் ஈட்டுகின்றனர். குறைந்த பராமரிப்பு செலவில் அதிக லாபம் கிடைப்பது இதன் முக்கிய காரணமாகும். அரசு ஊக்கத்திட்டங்களும், சமூக ஊடக விழிப்புணர்வும் இளைஞர்களை இந்த தொழிலில் ஈர்த்து வருகின்றன. நாமக்கல், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் பலர் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இயற்கை வழியில் வளர்க்கப்படும் கழுத்தரிச்சான் கோழிகள் சுற்றுச்சூழலுக்கும் நன்மை தருகின்றன. இது வெறும் உணவாக அல்ல, ஒரு வாழ்க்கைமுறை மாற்றமாக மாறியுள்ளது. இன்று நகரங்களிலும் மக்கள் சத்தான உணவு தேடி நாட்டுக்கோழியைத் தேர்வு செய்கின்றனர். அதனால் தான் இதனை “அதிசய நாட்டுக்கோழி” என்று அழைக்கிறார்கள் — பாக்க ஒரு மாதிரி இருந்தாலும், டேஸ்ட்ல இது பக்கா!