மும்பை: இந்தியாவில் மும்பையில் தனது முதல் கார் ஷோரூமை திறந்துள்ளது ‘டெஸ்லா’ நிறுவனம்,
உலகளவில் முன்னனி மின்சார கார் நிறுவனங்களில் ஒன்றான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்துள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஷோரூமை திறந்துவைத்தார். டெஸ்லா கார்களில் அதிக வரவேற்பை பெற்ற y மாடல் மின்சார கார்கள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் செல்லக்கூடிய காரின் விலை 62 லட்ச ரூபாய் எனவும், அதிலேயே 622 கிலோமீட்டர் செல்லக்கூடிய Long Range variant-இன் விலை 70 லட்ச ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் கார்கள் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.