சென்னை: இந்த வார தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில், 22 காரட் தங்க நகைகளின் விலை அதிகரித்து, கிராமுக்கு ரூ.9,090-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தங்கத்தின் விலை உயர்ந்து, குறைந்து வருகிறது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, மே 12 அன்று தங்கத்தின் விலை ரூ.2,360 ஆகக் குறைந்து ரூ.70,000-க்கு விற்கப்பட்டது. இதன் பின்னர், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. மே 28 முதல், தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது.
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, கிராமுக்கு ரூ.9,090 ஆகவும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.72,720 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, கிராமுக்கு ரூ.114 ஆக உயர்ந்தது.