இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி 22ஆம் தேதி, தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.60,000 என்ற விலையை தாண்டியது.
இன்று (ஜன.29) தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,595க்கும், ஒரு சவரன் ரூ.60,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களில் குறைந்துவந்த தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், இன்று தங்கம் விலை 680 ரூபாய் அதிகரித்து, ரூ.61,000-ஐ நோக்கி உயர்வு காண்கிறது.
மேலும், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,275க்கும், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.50,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கு பங்குச்சந்தை மற்றும் உலகளாவிய பொருளாதார நிலவரங்களும் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.