சென்னை: தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்து, பவுனுக்கு ரூ.71,600-க்கு விற்கப்படுகிறது. இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.71,920-க்கு விற்கப்பட்டது. இந்தியாவில், வாரத்தின் முதல் நாளான இன்று 22 காரட் நகை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,950-க்கும், பவுனுக்கு ரூ.320-குறைந்து ஒரு பவுன் ரூ. 71,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை, ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.