கோவை: வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று குறைந்துள்ளதால், அதன் விலையும் குறைந்துள்ளது. இது தற்காலிகமானது என்றும் விரைவில் மீண்டும் உயரும் என்றும் தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு படிப்படியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை புதிய சரித்திரம் படைத்து வருகிறது. மத்திய அரசு இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள சூழலில், தங்கம் விலை மீண்டும் கடுமையாக உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் ஒரு சவரன் ரூ. 68 ஆயிரம். இந்நிலையில் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் ரூ.2000 குறைந்துள்ளது. இதனால் தங்கம் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, கோவை தங்கம் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:- உலகின் பல்வேறு நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு விதிகளை அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் வெளிநாடுகளில் உள்ள தங்கத்தை தங்கள் நாடுகளுக்கு கொண்டு வரத் தொடங்கியுள்ளன. தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. இதனால் தற்போது தங்கம் விலை குறைந்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை ஒரு சவரன் ரூ. 68,480 ஆகவும், சனிக்கிழமை ரூ. 66,480. இது தற்காலிகமானது. விரைவில் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கும். இதனால் விலை மேலும் உயரும். ஒரு சவரன் விரைவில் ரூ. 70 ஆயிரத்தை விரைவில் கடந்துவிடும். விலைவாசி உயர்வால், கோவையில் தங்கம் மற்றும் நகை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 30 சதவீதம் மட்டுமே வியாபாரம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.