புதுடெல்லி: மஞ்சள் பட்டாணி மீதான வரி விலக்கு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஏழாவது பருப்பு வகை மாநாட்டில் பங்கேற்ற அவர், வரி விலக்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று அறிவித்தார்.
மஞ்சள் பட்டாணிக்கு விதிக்கப்படும் வரி அளவு குறித்த இறுதி முடிவை மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
டிசம்பர் 2023 முதல் மஞ்சள் பட்டாணிக்கு இறக்குமதி வரி விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மூன்று முறை நீட்டிக்கப்பட்ட இந்த சலுகை வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடையும்.
இறக்குமதி கணிப்புகளின்படி, 2024 ஆம் ஆண்டில் 67 லட்சம் டன் பருப்பு வகைகள் மற்றும் 30 லட்சம் டன் மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், 55 லட்சம் டன் பருப்பு வகைகள் மற்றும் 44 லட்சம் டன் மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.