மும்பை: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கூடுதல் வரிவிதிப்பால் உலகப் பங்கு சந்தைகள் பயங்கர சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் ரூபாய் மதிப்பு 50 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது
டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு எச்சரிக்கையால், உலக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 32 காசுகள் குறைந்து ₹85.76-ஆக இருந்தது. இந்த சரிவு நேற்றும் தொடர்ந்தது. காலையில் ₹85.89-ஆக தொடங்கி பின்னர் வர்த்தக நேர முடிவில் ₹86.26-ஆக நிறைவடைந்தது.
இது நேற்றைய மதிப்புடன் ஒப்பிடுகையில் 50 காசுகள் குறைவு. கடந்த 3 மாதங்களில் இது பெரிய வீழ்ச்சி என்று நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிரடி வரிவிதிப்பு உலக நாடுகள் மத்தியில் கடும் கண்டனத்தை சந்தித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.