ஜனவரி 1, 2025 முதல் மார்ச் 31, 2025 வரையிலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கிடைக்கும் இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அலுவலகங்கள் முந்தைய காலாண்டில் நடைமுறையில் இருக்கும்.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.2 சதவீதமும், தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு 7.7 சதவீதமும், கிசான் விகாஸ் பத்ராவுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் 2025 ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் நிலுவையில் உள்ளன.
சிறு சேமிப்பு திட்டங்கள் பொதுவாக இந்திய மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் எளிமையான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன. அவற்றுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை திருத்துவது வழக்கம், ஆனால் இந்த காலகட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் முன்பு நடைமுறையில் இருந்த வட்டி விகிதம் கையாளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.