தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்வு மற்றும் சரிவுளுடன் காணப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட்ட விலை, மே மாதத்தில் சற்றே குறைந்தது. உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள், பங்குச் சந்தை நிலவரம் ஆகியவை தங்க விலையில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தின.

மேலும், நாடுகளுக்கிடையிலான போர் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் நிதி அறிவிப்புகள் குறைந்ததனால் தங்கம் விலை மீண்டும் சிறிது சரிவைக் கண்டது.நேற்று, மே 26 அன்று, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்தது. ஒரு கிராம் ரூ.8,950க்கு விற்கப்பட்டது. சவரன் ரூ.320 குறைந்து, ரூ.71,600க்கு விற்பனையாகியுள்ளது.
இன்றைய நிலையில், மே 27 அன்று தங்க விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8,995க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.18 காரட் தங்கம் விலைவும் உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.7,415க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.560 அதிகரித்து ரூ.59,320க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மொத்தமாக பார்த்தால், தங்கத்தின் விலை மீண்டும் உயர்நிலைக்குத் திரும்பி வருகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்க விரும்புவோர் தற்போதைய நிலவரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.உலக சந்தையின் மாற்றங்கள், நிதி கொள்கைகள், பங்குச் சந்தை நிலை ஆகியவை எதிர்கால தங்கம் விலை மீது தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்த விலை நிலவரங்கள் தினமும் மாறக்கூடியவை என்பதால், வாங்கும் முன் பரிசீலனை அவசியம்.