சென்னை: சென்னையில் 22 காரட் தங்க நகைகளின் விலை இன்று பவுனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் தங்கத்தின் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
கூடுதலாக, உலக நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளும் தங்கத்தின் விலையைப் பாதிக்கின்றன. அதன்படி, தங்கத்தின் விலை உயர்ந்து குறைகிறது.

இதனால், சென்னையில், இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்து, கிராமுக்கு ரூ.9,000-க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து, பவுனுக்கு ரூ.72,000-க்கு விற்கப்படுகிறது.
இன்று, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.120 ஆகவும், கிலோவுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாகவும் மாறாமல் உள்ளது.