உலக பொருளாதார நிலைமையின் காரணமாக கடந்த ஆண்டு தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதனைத் தொடர்ந்த அமெரிக்காவின் வரி கொள்கைகள் மேலும் பாதிப்பை ஏற்படுத்தின. பரஸ்பர வரி விதிப்புகள் உலக சந்தையை குழப்பம் கொண்டுள்ளன. இதனால் மக்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி அதிகம் வாங்கத் தொடங்கினர்.

இதன் விளைவாக தேவை அதிகரித்து விலை உயர்ந்தது.அந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் நகை விற்பனையாளர்களும், பொதுமக்களும் நிம்மதியடைந்துள்ளனர். நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8855-க்கும், ஒரு சவரன் ரூ.70,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இன்று விலை மேலும் குறைந்துள்ளது.
22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.8805 ஆகவும், ஒரு சவரன் ரூ.70,440 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7255 ஆகவும், ஒரு சவரன் ரூ.58,040 ஆகவும் உள்ளது.வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.109, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000 என்ற நிலைதான் தொடர்கிறது.
இந்த விலை மாற்றங்கள் நகை வணிகத்தில் சிறிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மீண்டும் சந்தையில் ஆர்வம் காட்டுகின்றனர்.தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் நாள்தோறும் மாறும் என்பதால், வாங்கும் முன் தற்போது நிலவும் விலை விவரங்களை சரிபார்ப்பது முக்கியம்.