சென்னை: கடந்த முறை போல் இந்த பட்ஜெட்டில் தங்கம் விலை குறைப்பு அறிவிப்புகள் வருமா? எதிர்பார்ப்புக்கு மத்தியில் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. எக்ஸ்ப்ளோர் மேலும் பட்ஜெட் 2025 யூனியன் பட்ஜெட் 2025-ல் இருந்து நிபுணர்களின் கருத்துகள் சென்னையில், தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ. 120 வரை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தங்க ஆபரணங்களின் விலை சவரன் ரூ.61,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,745 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த தங்கத்தின் விலை விரைவில் ரூ.62 ஆயிரத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் வாங்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த முறை, மத்திய பட்ஜெட்டின் போது, தங்கம் இறக்குமதி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.4 ஆயிரம் சரிந்தது.

எனவே, இம்முறையும் அதுபோன்ற ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகுமா என நகை பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த 2014 பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 15 சதவீதமாக இருந்தது. 9 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும் என கூறப்படுகிறது.