இன்றைய சூழலில் 20,000 – 30,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் பெரும்பாலும் அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்கே சிரமப்படுகிறார்கள். ஆனால் பொருளாதார நிபுணர் தீபக் வத்வா கூறுவதுப்படி, சரியான திட்டமிடலும் கட்டுப்பாடும் இருந்தால் வெறும் ₹25,000 சம்பளத்தில் கூட வீடும், Fortuner காரும் வாங்குவது சாத்தியமாகும்.

அவரின் ஆலோசனைப்படி, மாதம் ₹5,000 SIP முதலீட்டில் செலுத்தி, ஒவ்வொரு ஆண்டும் 20% அதிகரித்தால் 15 ஆண்டுகளில் சுமார் ₹1.5 கோடி உருவாக்கலாம். பின்னர் SWP திட்டத்தின் மூலம் அடுத்த 30 ஆண்டுகள் மாதம் ₹2 லட்சம் வரை எடுத்துச் செலவிடலாம். இதன் மூலம், பொறுமையாக இருந்தால் எவரும் தங்கள் கனவு இலக்குகளை அடையலாம் என அவர் கூறுகிறார்.
வட்டிக்கு வட்டி சேர்த்தால்தான் நீண்ட காலத்தில் பெரும் வளர்ச்சி கிடைக்கும். முதலீட்டில் கிடைக்கும் லாபத்தையும் மீண்டும் முதலீடு செய்தால் அது பல மடங்கு உயர்கிறது. “இது உடனே பணக்காரன் ஆக்கும் திட்டமில்லை; பொறுமையும் கட்டுப்பாடும் இருந்தால் தான் மேஜிக் நடக்கும்” என வத்வா தெரிவித்துள்ளார்.
ஆகவே, குறைந்த வருமானத்தில் கூட, முறையான சேமிப்பும் முதலீடும் செய்தால், காலப்போக்கில் வீடு, கார் போன்ற பெரிய கனவுகளை நனவாக்க முடியும் என்பதை அவரது ஆலோசனை வெளிப்படுத்துகிறது.