துணியில் சாயம் மற்றும் மஞ்சள் கறையை நீக்க எளிய முறைகள் உள்ளன. சாயம் ஒட்டிய துணியைப் போக்க ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, சாயம் பட்ட துணியை அதில் போட வேண்டும். இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் அந்த துணியை எடுத்து குளிர்ந்த நீரில் பிழிந்து வெயிலில் காயவைக்க வேண்டும். இதை மூன்று அல்லது நான்கு முறை செய்ய, சாயம் முழுமையாக நீங்கிவிடும்.
மஞ்சள் கறையைப் போக்க, கறை ஏற்பட்ட பகுதியின் மீது வினிகர் சிறிதளவு ஊற்றி ஒரு பிரஷ் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீரில் கழுவி எடுத்தால் கறை பூரணமாக நீங்கும். இந்த எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி துணிகளை பக்கவிளைவுகள் இல்லாமல் சுத்தமாக்கலாம்.