நியூயார்க்கில் தொடங்கிய டிரம்ப் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தற்போது அமெரிக்க முழுவதும் பரவி வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் மீண்டும் அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தனது ஆட்சியை தொடங்கிய சில வாரங்களுக்குள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வரி உயர்வுகள், பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதிகளை நிறுத்துவது, வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மற்றும் அரசுத் துறையில் சிறப்பம்சமான மாற்றங்களை மேற்கொள்வது போன்றவை பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

அதிபராக பதவி ஏற்ற பின்னர் மட்டும் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணமாக அரசு செலவுகளை குறைப்பதே என அவர் விளக்கம் அளித்தாலும், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் இதனை ஜனநாயக விரோத நடவடிக்கையாக கண்டனம் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. 50 மாகாணங்களிலும் 400க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் பேரணிகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். டவுன்டவுன், சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் மட்டும் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் திரண்டுள்ளனர்.
இந்த போராட்டங்களின் பிரதான கோஷம் – “சர்வாதிகாரம் வேண்டாம், ஜனநாயகம் வாழ்க” என்பதாகும். மக்கள் கைகளில் பதாகைகள், போராட்ட சின்னங்கள் ஏந்தியபடி தெருக்களில் அணிவகுத்து நகர்கின்றனர். டிரம்ப் அரசின் போக்கை கண்டித்து தொடங்கிய இந்த இயக்கம், “மீண்டும் ஒரு சுதந்திரப் புரட்சி” என்ற கோரிக்கையுடன் உருவாகியுள்ளது.
வாஷிங்டன் டிசியில் உள்ள துணை அதிபர் மாளிகையை முற்றுகையிடும் வகையில் ஒரு பெரிய பேரணியும் துவங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தொடர்ந்து பல கட்டமாக போராட்டங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளதால், டிரம்ப் நிர்வாகம் பதற்றத்தில் இருக்கிறது. இத்தகைய நிலைமை அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.