பிரான்சின் பாரிஸில் அமைந்துள்ள சியன் நதி, ஐரோப்பாவின் வரலாற்று சிறப்புமிக்க நீர்வழி மட்டுமல்லாது, ஒரு காலத்தில் நாடு முழுவதும் நீர் போக்குவரத்துக்கும் பயன்பட்டது. 780 கி.மீ தூரம் ஓடும் இந்த நதி, டிஜான் பகுதியில் இருந்து தொடங்கி முக்கியமான நகரங்கள் வழியாக பாய்ந்து, இறுதியில் இங்கிலீஷ் கால்வாயில் கலக்கிறது. அதன் கரையில் அமைந்துள்ள ஈபிள் டவர் உள்ளிட்ட சின்னங்கள் பாரிசின் பிரமுகர்மான அடையாளமாக விளங்குகின்றன.

1923 ஆம் ஆண்டு, நதியின் நீர் மிகவும் குப்பையாக மாறியதால், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொழிற்சாலைகளும் வீடுகளும் கழிவுகளை நதியில் கழித்ததால், இது ஒரு பெரிய சாக்கடையாகவே மாறியது. பல முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் 1990களின் இறுதியில், சியன் நதியை மீட்டெடுக்கும் திட்டம் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, கழிவுநீரை நிர்வாகம் கட்டுப்படுத்த தொடங்கியது.
இந்த துாய்மை பணி ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு வேகமடைந்தது. நதியில் மீண்டும் படகு போட்டிகள் நடைபெற்றன. நதிக்கரைகள் அழகுபடுத்தப்பட்டன. பல கட்ட செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதில் பொதுமக்களுக்கும் பங்களிப்பு இருந்தது. இதனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விழிப்புணர்வும் அதிகரித்தது.
100 ஆண்டுகளுக்குப் பின், பொதுமக்கள் மீண்டும் இந்த நதியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மகிழ்ச்சியான இந்த தருணம், அரசாங்கத்தின் தீர்மானமும் செயல்திறனும் இருந்தால், பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கிறது. 1,405 கோடி ரூபாய் செலவில், சியன் நதியின் மறுபிறவி சாத்தியமானது. இச்செயல், உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த சுற்றுச்சூழல் பாடமாக திகழ்கிறது.