பெய்ரூட்: இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்புல்லா முன்னாள் தலைவர் நசரல்லாவின் இறுதிச் சடங்கு, 5 மாதங்களுக்கு பிறகு நடந்துள்ளது.
இறுதி ஊர்வலத்தில் 14 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்புல்லா முன்னாள் தலைவர் நசரல்லாவின் இறுதிச் சடங்கு, 5 மாதங்களுக்கு பிறகு நடந்துள்ளது. நேற்று பெய்ரூட் நகரில் சயித் ஹசன் நசருல்லா, சயத் ஹாஷெம் சஃபீத்தின் இருவரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
இவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 14 லட்சம் பேர் பங்கேற்றதாகவும், இதுதான் இந்நாட்டின் வரலாற்றில் அதிகம் பேர் பங்கேற்ற இறுதி ஊர்வலம் என்றும் கூறப்படுகிறது.