சான் பிரான்சிஸ்கோ: இணைய உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் பயனர்களின் 1,600 கோடி ‘லாகின்’ விவரங்கள் திருடப்பட்டுள்ளன. இதில் பல மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பாஸ்வேர்டுகள் ‘டார்க் வெப்’-ல் விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பெரும் தகவல் கசிவை சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் ‘Cybernews’ மற்றும் ‘Keeper Security’ உறுதிப்படுத்தியுள்ளன. இவை 30 தனித்தனி தரவுத்தொகுப்புகளாக இருக்கின்றன என்றும், ஒவ்வொன்றிலும் பல கோடி விவரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விவரங்கள் பேஸ்புக், ஆன்லைன் சேவைகள் மற்றும் செயலிகளில் இருந்து திருடப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய பயனர்களின் தகவல்களும் இதில் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயனர்கள் உடனடியாக பாஸ்வேர்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்பதும், 2FA (Two-Factor Authentication) போன்ற பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. பாதுகாப்பான இணைய பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில், PASSKEY என்ற புதிய முறை பல தளங்களில் பரவலாக அறிமுகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.