நியூயார்க்: 2 விண்வெளி வீரர்களையும் அடுத்த ஆண்டு பூமிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா தலைவர் பில் நெல்சன் தெரிவித்தார். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும், போயிங் நிறுவனம் தயாரித்துள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தின் முதல் பயணத்தில், கடந்த ஜூன் 5-ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றனர்.
8 நாள் பயணமாக அங்கு சென்ற அவர்கள், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்குத் திரும்ப முடியாமல் தற்போது வரை அங்கேயே இருக்கின்றனர். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு இன்னும் சரிசெய்யப்படவில்லை
இதையடுத்து, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் இருவரையும் பிப்ரவரி மாதம் பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.