உக்ரைன்-ரஷ்யா போர் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம், தரையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், உக்ரைனின் டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள செரேட்னே மற்றும் கிளிபன் பைக் கிராமங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனுடன், கடந்த ஒரு வாரத்தில் உக்ரைனின் ராணுவ தளவாட தொழிற்சாலை உள்ளிட்ட 143 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ரஷ்யப் படை தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைன் மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாகவும் ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. இந்த சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான நேரடி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்தாலும் மறுபுறம் போர் மேலும் தீவிரமடைவது நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.