தெற்கு கரோலினா: தப்பியது 43… தேடும் பணியில் 2 ஆயிரம் பேர்… தெற்கு கரோலினாவில் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகளை தேடும் வேட்டையில் 2,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் யமாசி என்ற நகரில் உள்ள அல்பா ஜெனிசிஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்து, 43 குரங்குகள் தப்பியுள்ளதால் அதனைப் பிடிக்க ஆராய்ச்சி மையத்தின் 2,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தப்பிய குரங்குகள் இன்னும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை என்பதால், குரங்கால் எந்த நோயும் பரவ வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் வீடுகளுக்குள் குரங்குகள் நுழையாமல் இருக்கும் வகையில் வாயில் கதவுகளைப் பூட்டி வகைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.