ஸ்டாக்ஹோம்: 2024-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார்.
அதன்படி, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதிக்கான நோபல் பரிசுகள் 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் (7-ம் தேதி) முதல் நடந்து வருகிறது.
இரண்டு அமெரிக்கர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. நேற்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று வழங்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பேக்கர், இங்கிலாந்தை சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வகை புரதத்தை கண்டுபிடித்ததற்காக 3 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புரதங்களின் கட்டமைப்பை தீர்மானிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
ரூ.8.39 கோடி பரிசுத் தொகையுடன் தங்கப் பதக்கமும் அடங்கிய நோபல் விருதுகள், விருதை நிறுவிய ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.