இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடரும் நிலையில், காசாவில் ஜிகிம் கிராசிங்கில் உள்ள உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 48 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ஐநா இதனை கண்டித்து, பசி மற்றும் பட்டினியை இஸ்ரேல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுவரை 60,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் மாதத்திலிருந்து மட்டும் 89 குழந்தைகள் மற்றும் 65 முதியவர்கள் ஊட்டச்சத்து குறைவால் இறந்துள்ளனர். சர்வதேச நாடுகள் இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து, காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த அமைதியற்ற சூழலில், போருக்குப் பின்புலமான காரணங்களை மீடியா மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் பல்வேறு கோணங்களில் முன்வைத்து விவாதிக்கின்றன. இதனால், அப்பாவிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது கவலையளிக்கின்ற உண்மை.