கீவ்: உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள போல்டாவா பகுதியை நோக்கி ரஷ்யா திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
வான்வழி தாக்குதல் எச்சரிக்கை ஒலித்தாலும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நேரம் போதாது. ஏவுகணை தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவ அகாடமியும், மருத்துவமனையும் இருந்ததால், 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார். போர் எப்போது முடிவடையும்?
கடந்த ஆண்டு, பிப்ரவரி 24, 2022 அன்று, ரஷ்யா அதிகாலையில் உக்ரைன் மீது தனது போரைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, போர் தொடர்கிறது. இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதனால் ரஷ்யா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. விவசாய உற்பத்தி மற்றும் எண்ணெய் வர்த்தகத்தால் உக்ரைனும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்தில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் அமைதி மாநாடு நடைபெற்றது.இதில் அமெரிக்கா உள்ளிட்ட 92 நாடுகள் பங்கேற்றன. ஆனால் ரஷ்யா புறக்கணித்ததால் மாநாடு தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இந்தியா சார்பில் 2-வது அமைதி மாநாடு நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் முன்னோட்டமாக கடந்த ஜூலை மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்து போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.