தாய்லாந்து: பிரம்மா உருவம் கண்டுபிடிப்பு… தாய்லாந்தின் பிமாய் நகரில் உள்ள புத்த கோயில் ஒன்றில் கண்டெடுக்கபட்ட கலைப்பொருட்களில் இந்து கடவுளான பிரம்மாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பிமாய் நகரில் உள்ள வாட் தம்மசக் சேமா ராம் கோயிலில் வடிகால் அமைப்புப் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயிலுக்குள் உள்ள சயன புத்தர் சிலை அமைந்துள்ள இடத்தில் தோண்டும் போது நான்கு அடி ஆழத்தில் பீங்கான் பானை ஒன்றை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.
அந்த பானையில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட 33 பழங்கால ஆபரணங்கள் இருந்துள்ளன. மேலும் இவற்றின் காலம் சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் மூன்று கலைப்பொருட்களைக் கண்டெடுத்துள்ளனர்.