பிரேசில் : பிரேசில் வந்துள்ள இந்திய பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் அல்வரோடா மாளிகையில் பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலியா நகரில் உள்ள அல்வோராடா மாளிகைக்குச் சென்றார்.
பிரேசில் அதிபர் லூலா டி சில்வா மாளிகை வாசலில் வந்து நின்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். பிரதமர் மோடி பிரேசிலுக்கு செல்வது இது 3-வது முறை. இந்த முறை மிகவும் பிரம்மாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.