இலங்கை: ‘கவரிங்’ மோதிரத்தை வைத்துவிட்டு தங்க மோதிரம் நூதன திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை நுவரெலியா மாவட்டத்தில், நகை கடை ஒன்றில் மோதிரம் வாங்குவது போல் நாடகமாடி ஷோகேஸ்-இல் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரத்தை திருடிய நபர், கடை உரிமையாளருக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் எடுத்து வந்த கவரிங் மோதிரத்தை அதே ஷோகேஸில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
நகை மாற்றப்பட்டுள்ளதை பின்னர் கவனித்த கடை உரிமையாளர், சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.