நாக்பூரில் நடைபெற்ற அதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் பாரதிய கிசான் சங்கம் சில முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதில், “இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களும் மரபணு மாற்றமின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயப் பயிர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் உள்ள ரசாயனங்களின் தர அளவை தீர்மானிக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்புத் துறை அதைச் செய்யத் தவறிவிடுகிறது. அல்சைமர், புற்றுநோய், தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள் போன்றவற்றுக்கு ரசாயன மாசுபட்ட விவசாயப் பொருட்கள் முக்கிய காரணம் என்பதை பொது சுகாதார அமைச்சகம் மற்றும் உணவு மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பசுவை அடிப்படையாகக் கொண்ட இயற்கை பொருட்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் பொருட்கள் மட்டுமே இந்தியா ஆரோக்கியமான மற்றும் சத்தான மக்கள்தொகை கொண்ட நாடாக மாற அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்து, அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இது தொடர்பாக இந்தியா அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் பாரதிய கிசான் சங்கம் நிறைவேற்றிய தீர்மானம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில், எந்தெந்த பொருட்களைக் குறைக்கலாம் அல்லது நீக்கலாம் என்ற பேச்சுக்கு மத்தியில், சோயாபீன் மற்றும் மக்காச்சோளம் போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வதில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது.
இதைத் தடுக்க, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் பாரதிய கிசான் சங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது ஆளும் மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுக்கும் செயலாகக் கருதப்படுகிறது. விளம்பரம் இந்துதமிழ்29 ஜூலை இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் உள்ள முட்டுக்கட்டை மிக முக்கியமான பிரச்சினை. இந்தியாவின் பால் சந்தை உலகிலேயே மிகப்பெரியது என்பதால், அமெரிக்கா பால் பொருட்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, ‘அசைவ பால்’ விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.
அமெரிக்காவில், மாடுகளுக்கு கோழி மற்றும் மீன் இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் மாவுப் பொருட்கள் உணவாக வழங்கப்படுகின்றன. பன்றி கொழுப்பு மற்றும் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் புரதப் பொடிகள் உணவாக வழங்கப்படுகின்றன. அத்தகைய உணவை உண்ணும் பசுக்களிடமிருந்து பெறப்படும் பால் ‘அசைவ பால்’ என்று கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் தாமதம் ஏற்படுவதற்கு, பசுக்கள் மற்றும் பால் பொருட்கள் இந்தியாவில் புனிதமாகக் கருதப்படுவதால், அமெரிக்க பால் பொருட்களை அனுமதிக்க மாட்டோம் என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாடும் காரணம். வர்த்தக உறவுகள் மற்றும் வருவாய் வளர்ச்சியைத் தவிர்த்து, நாட்டு மக்களின் உடல்நலம் மற்றும் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.