நேபாளம் ஒரு சுமார் 30 மில்லியன் மக்கள் தொகையுள்ள நாடாகும். ஆனால் நாட்டில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமை மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. வறுமை, வேலையின்மை, போக்குவரத்து மற்றும் நவீன வசதிகளின் குறைவு நேபாள மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
நேபாளம் முழுவதும் பயணிகள் ரயில் ஒரு மட்டும் இயங்குகிறது. இது ஜெயநகர்-பங்கா பாதையில் பங்காவிற்கு செல்லும் பயணிகள் ரயிலாகும். சரக்கு ரயில் ரக்சால்-சிர்சியா பாதையில் இயங்குகிறது. பயணிகள் ரயில் சுமார் 38 கிலோமீட்டர் தூரத்தை கடக்க இரண்டு மணி நேரம் எடுக்கும் மெதுவான ரயிலாகும்.

இந்த ரயில்கள் டீமு (டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. நவீன வசதிகள் மிகக் குறைவு மற்றும் பயண வேகம் அதிகபட்சம் மணிக்கு 40 கிமீ மட்டுமே. இதனால் பயண நேரம் நீள்கிறது, பெரும்பாலான பயணிகள் பேருந்து அல்லது ஆட்டோவை பயன்படுத்துவதை தேர்வு செய்கிறார்கள்.
இந்த நிலையையை மாற்ற இந்தியா உதவியுடன் நேபாளத்தில் ரயில் பாதைகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது நாட்டின் போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுகிறது.