இந்தோனேஷியா: சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை இந்தோனேஷியா உயர்த்தியுள்ளதாம்.
இந்தோனேஷியாவில், பள்ளி மாணவர்களிடையே புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்கும் நடவடிக்கையாக, சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பு 18-ல் இருந்து 21-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் 7 கோடி பேருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளதாகவும், அவர்களில் 7 சதவீதம் பேர் 10 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிகரெட் மீதான கலால் வரியை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திவரும் இந்தோனேஷிய அரசு, இந்தாண்டு 10 சதவீதம் உயர்த்தி உள்ளது.