அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்தித்தனர். இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டாலும், எந்த பெரிய முன்னேற்றமும் எட்டப்படவில்லை. உக்ரைன் போர் எப்போது முடிவடையும் என்ற கேள்விக்கேட்டபோது, டிரம்ப் அதற்கு பதில் அளித்துள்ளார்.

உக்ரைனில் தற்போது அமெரிக்க ஆதரவு பெற்ற ஜெலன்ஸ்கி அதிபராக உள்ளார். அவருக்கு எதிராக ரஷ்யா போரை தொடுத்துள்ள நிலையில், இந்த மோதலை நிறுத்தும் வழிகளை ஆராய தான் டிரம்ப் – புதின் சந்தித்தனர். ஆனால் இறுதிவரை எந்தத் தீர்வும் எட்டப்படாததால், போர் நிறுத்தம் குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
டிரம்ப் கூறியதாவது, “பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது, ஆனால் அது ஒப்பந்தம் வரை செல்லவில்லை”. இதனால் போர் நிறுத்தம் தொடர்பான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது டிரம்ப் எதிரி நாடுகளின் தலைவர்களுடன் சந்திப்பது முதல்முறையல்ல. அவர் கடந்த காலத்தில் வடகொரிய அதிபரை சந்தித்தபோது கூட உலகம் எதிர்பார்த்த முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதேபோல் இம்முறை புதினுடன் நடந்த சந்திப்பும் பலனின்றி முடிந்துள்ளது.
இந்த போரின் மூல காரணம் நேட்டோவில் உக்ரைன் சேர முயன்றதே என சில அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியதால், ரஷ்யா போரைத் தொடுக்க தவறான சூழ்நிலையில் தள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.
அலாஸ்கா கூட்டத்துக்குப் பின்னர் பேசிய டிரம்ப், “உக்ரைன் போர் முடிவடைவது ஜெலன்ஸ்கியின் கையில் தான் இருக்கிறது” எனக் குறிப்பிட்டார். இதனால் போரின் முடிவு இன்னும் தொலைவில் உள்ளது என்பதற்கான சிக்னல் வெளிப்படையாகி விட்டது.