அமெரிக்கா: இந்தியா மீது கூடுதல் வரி விதித்ததன் மூலம் அமெரிக்கா தனக்குத் தானே சூடு போட்டுக்கொள்வதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோல்ஃப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் செயலால், வேறு நாடுகளில் தனது புதிய ஏற்றுமதிச் சந்தையை உருவாக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இது பிரிக்ஸ் நாடுகளை வலுப்படுத்தும் வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில், இந்தியா பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது என்றும், இந்தியா மீது அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதிப்பது, யானையை ஒரு எலி எதிர்ப்பது போன்றது என்றும் வோல்ஃப் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் கடினமான நபராக அமெரிக்கா நடந்துகொண்டாலும், இந்தியாவைப் பொறுத்தவரை வித்தியாசமான எதிரியுடன் விளையாடுவதைப் போன்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.