அமெரிக்கா: ஷாவ்மி காரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார் ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ. ஜிம்பேர்லி.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷாவ்மி எஸ்.யூ.7 பேட்டரி காரின் தொழில்நுட்பத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார் அமெரிக்காவின் போர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபேர்லி.
கடந்த 6 மாதங்களாக ஷாவ்மி எஸ்.யூ.7 காரைத் தான் பயன்படுத்துவதாகவும், சமீபகாலமாக அமெரிக்க நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் சீன நிறுவன கார்கள் தயாரிக்கப்படுவதாகவும் ஜிம் ஃபேர்லி தெரிவித்துள்ளார்.
இந்திய மதிப்பில் 25 லட்ச ரூபாய் விலை கொண்ட ஷாவ்மி எஸ்.யூ.7 பேட்டரி கார், 6 மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்படும் முன்பே, அதனை ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது