ஆபியா: தென் பசிபிக் தீவு நாடான சமோவாவில் உள்ள அபியாவில் காமன்வெல்த் நாடுகளின் 2 நாள் உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று அபியா பெருங்கடல் பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
கடுமையான காலநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் அதிகப்படியான சுரண்டல் ஆகியவற்றை எதிர்கொண்டு கடல் வளங்களை பாதுகாக்க 56 உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. மாநாட்டில் கானாவின் வெளியுறவு அமைச்சர் ஷெர்லி அயோர்கோரர் போட்ச்வே காமன்வெல்த் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
அடுத்த காமன்வெல்த் மாநாடு 2026-ல் ஆன்டிகுவா மற்றும் பார்படாஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.