கனடா: நாங்களும் வரி விதிப்போம் இல்ல…. அமெரிக்காவில் கனடா, மெக்சிகோ நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, கூடுதலாக 25% வரி இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா, சீனா கூடுதல் வரி விதித்துள்ளது.
வட அமெரிக்க நாடுகளான கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 35 சதவீதமும் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்ற பின் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்தார். பின் ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று நாடுகளுக்குமான வரி விதிப்பு, இன்று (மார்ச் 4) முதல் அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ‘
மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து அதிக அளவிலான போதைப் பொருட்கள்
அமெரிக்காவுக்குள் வருகின்றன. ‘இந்த போதை அரக்கனால் அமெரிக்கா தொடர்ந்து பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் இந்த கூடுதல் வரிவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக கனடாவும் கூடுதல் வரியை விதித்துள்ளது.