ஒட்டாவோ: கனடா நாடாளுமன்றத்தில் 338 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 170 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 153 எம்பிக்கள் உள்ளனர். புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 25 எம்.பி.க்கள் அரசுக்கு ஆதரவாக இருந்தனர். கடந்த ஆண்டு, புதிய ஜனநாயகக் கட்சி அரசாங்கத்திற்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றது.
இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கனடா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ட்ரூடோ பெரும்பான்மையை நிரூபித்தார். இந்நிலையில், காலிஸ்தான் தீவிரவாதி பிரச்னையால், பிரதமர் ட்ரூடோவுக்கும், இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும், ஆளும் லிபரல் கட்சியில் உள்ள பல்வேறு எம்.பி.க்களும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகவும் காய்களை நகர்த்தினார். இந்நிலையில், ஆளும் லிபரல் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் புதன்கிழமை நடைபெறவிருந்தது. இந்த சந்திப்புக்கு முன்னதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று இரவு பதவி விலகினார்.