பெய்ஜிங்: அமெரிக்க அரசாங்கம் தற்போது சீனப் பொருட்களுக்கு 30 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த சூழலில், அரிய வகை கூறுகளை சீனா வழங்க மறுத்ததால், நவம்பர் 1 முதல் சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, சீன மூத்த வர்த்தக அதிகாரி ஒருவர் நேற்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சீனாவின் குறைக்கடத்திகள் மற்றும் சிப் உட்பட சுமார் 3,000 வகையான பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை, சுமார் 900 தயாரிப்புகளுக்கு மட்டுமே தடை விதித்துள்ளோம். அமெரிக்காவின் நடவடிக்கைகளால் சீன நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. தற்போது, அமெரிக்கா வரிவிதிப்பு மூலம் அச்சுறுத்துகிறது.

நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். சீனா வர்த்தகப் போரை விரும்பவில்லை. அமெரிக்க அரசாங்கம் தனது தவறுகளை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், சீனாவைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
வரிவிதிப்பு பிரச்சினையில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. இதேபோல், வணிக கப்பல் போக்குவரத்திலும் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தொடர்ந்து செயல்படுகிறது. இவ்வாறு ஒரு சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.