வாஷிங்டன்: கொரோனா தொற்று இயற்கையாக தோன்றவில்லை. அது சீன ஆய்வகத்தில் இருந்தே தோன்றியதாக சிஐஏ நம்புகிறது என்று அறிக்கை வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறை பதவி ஏற்றுள்ள நிலையில், அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ) இயக்குநராக கஜான் ராட்கிளிப் கடந்த 24ம் தேதி பதவி ஏற்றார். இந்நிலையில் சிஐஏ ஒரு அறிக்கையை வௌியிட்டது.
அதில், “கொரோனா தொற்று இயற்கையாக தோன்றவில்லை. அது சீன ஆய்வகத்தில் இருந்தே தோன்றியதாக சிஐஏ நம்புகிறது. ஆனால் குறைந்த அளவிலான ஆதாரங்கள் மற்றும் அதிலுள்ள சில முரண்கள் காரணமாக உறுதியாக சொல்ல முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.