இலங்கை: ரூ. 23 கோடி ஊழல் வழக்கில் அர்ஜுன ரணதுங்காவை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா 2017ம் ஆண்டு இலங்கையின் பெட்ரோலியத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அவரது சகோதரரான தமுக்கா ரணதுங்கா அரசு பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார்.
அர்ஜுன ரணதுங்காவும், அவரது சகோதரரும் சேர்ந்து பெட்ரோல் கொள்முதலில் ரூ. 23 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தமுக்கா ரணதுங்காவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், ரூ. 23 கோடி ஊழல் வழக்கில் அர்ஜுன ரணதுங்காவை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அர்ஜுன ரணதுங்காவை கைது செய்ய இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ரணதுங்கா தற்போது வெளிநாட்டில் உள்ள நிலையில் அவர் இலங்கை வந்த உடன் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.