அமெரிக்கா: எலான் மஸ்க் ஒரு பைத்தியம் என்று டெஸ்லா கார் ஓனர்கள் தங்கள் கார்களில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளது பேசும் பொருளாகியுள்ளது.
அமெரிக்க அரசு ஊழியர்களை தொடர்ந்து வேலையை விட்டு நீக்குவதால், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன கார்கள் அந்நாட்டில் தீ வைத்து கொளுத்தப்பட்டு வருகின்றன.
இதிலிருந்து தங்கள் கார் தப்பிக்க உரிமையாளர்கள் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தில் மஸ்க் இணையும் முன்னரே கார் வாங்கிவிட்டோம்.
ஆனால் கண்டிப்பாக மஸ்க் ஒரு பைத்தியம்தான் எனவும் அவர்கள் தங்கள் கார்களில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளனர். எலான் மஸ்கிற்கு எதிராக எனும் கடும் குன்றச்சாட்டுகள் ட்ரம்ப் நிர்வாகத்தை பெரும் அளவில் பாதிக்கும் என அரசியல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து எலான் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதால் அதிபட்சம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்வார் எனவும் கூறப்படுகிறது.