வாஷிங்டன் : 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக இன்டெல் நிறுவனம் அறிவித்து உள்ளது. கூடுதல் செலவினங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல் நிறுவனம். ஜூன் மாத காலாண்டில், அந்த நிறுவனம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்தித்தது. இதனையடுத்து நடப்பாண்டு 10 பில்லியன் டாலர்( 83 கோடி ரூபாய்) மதிப்பு செலவை குறைக்கும் திட்டத்தை கையில் எடுத்து உள்ளது.
தனது செயல்பாட்டை நெறிபடுத்தும் வகையில் 15 சதவீதத்திற்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்து உள்ளது. இது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. . தற்போது இன்டெல் எடுத்த முடிவால் 18 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு இன்டெல் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.