வாஷிங்டன்: குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கடுமையாக சாடினார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 5ம் தேதி நடக்கிறது.
இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர், டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, குடியரசுத் தலைவர் வேட்பாளராக, ஜனநாயகக் கட்சி சார்பில், துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார்.
விஸ்கான்சினில் நடந்த பேரணியில் டொனால்டு டிரம்ப் பேசியதாவது: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர். வன்முறைக் குற்றங்களைச் செய்யும் புலம்பெயர்ந்தோர் அரக்கர்கள், மோசமான விலங்குகள்.
நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அனுமதித்ததற்கு ஹாரிஸ் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் தான் காரணம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அதிகமாக பேசும் டிரம்பை தோற்கடிப்பாரா என்பது தெரிந்துவிடும்.